Monday 23 April 2018

வெளியீடு கண்டது மஇகா வேட்பாளர் பட்டியல்; இது உறுதியானதா?





ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு  மஇகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்  18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் மஇகா வரும் 24ஆம் மஇகா தலைமையகத்தில் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்பர் என அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த பட்டியலின் விவரம்:

நாடாளுமன்றத் தொகுதிகள்

1. சிகாமட் - டத்தோஶ்ரீ  டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்.
2. கேமரன் மலை - டத்தோ சி.சிவராஜ்
3. தாப்பா - டத்தோஶ்ரீ சரவணன்
4. சுங்கை சிப்புட்- டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி
5. உலு சிலாங்கூர் - டத்தோ ப.கமலநாதன்
6. காப்பார் - டத்தோ மோகனா முனியாண்டி
7. சுங்கை பூலோ - அ.பிரகாஷ் ராவ்
8.  கோத்தா ராஜா - வி.குணாளன்.
9. போர்டிக்சன்- டத்தோ வி.மோகன்

சட்டமன்றத் தொகுதிகள்

1. லுனாஸ் - துரைசிங்கம்
2. புக்கிட் செலம்பாவ் - டத்தோ ஜஸ்பால் சிங்
3. பாகான் டாலாம் - ஜெ.தினகரன்
4. பிறை - சுரேஷ் முனியாண்டி
5. சுங்காய் - டத்தோ வ.இளங்கோ
6: ஜெலப்பாங்தங்கராஜ்
7. ஜெராம் - டத்தோ எல்.மாணிக்கம்
8. ஶ்ரீ தஞ்சோங் - தினாளன் ராஜகோபாலு
9.  காடேக் - டத்தோ பன்னீர் செல்வம்
10. சபாய் டத்தோ ஆர்.குணசேகரன்
11. கம்பீர் - டத்தோ எம்.அசோஜன்
12. தெங்காரா- ரவீன்குமார்
13. கஹாங் - டத்தோ வித்தியானந்தன்
14. ஸ்கூடாய் - டத்தோ எஸ்.கண்ணன்
15. ஈஜோக் - கரு. பார்த்திபன்
16. சுங்கை துவா - டத்தோ என்.ரவிசந்திரன்
17. செந்தோசா - டத்தோ ஆர்.சுப்பிரமணியம்
18. புந்தோங் - (பெயர் விடுபட்டுள்ளது)

இந்த பெயர் பட்டியல் உண்மையா? பொய்யா? என்பது தெரியாத நிலையில் இவர்கள்தான் வேட்பாளர்களா? என அனைவரிடம் கேள்வி எழுந்து வருகிறது.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த மாநில தேமு தலைவர்களே அறிவிப்பர் என கூறப்படும் சூழலில் மஇகாவின் இந்த வேட்பாளர் அறிவிப்பு உண்மையானதா? என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

No comments:

Post a Comment