Saturday, 21 April 2018

உள்ளூர் வேட்பாளரை களமிறக்குக- சுங்கை சிப்புட் பக்காத்தான் ஹராப்பான் கோரிக்கை


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின்  சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சைட் அஹ்மாட் புத்ரா பின் இஷாக் களமிறக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுங்கை சிப்புட் பக்காத்தான் ஹராப்பானின் பிரச்சார பகுதித்  தலைவர் அமினுடின் முகமட் சுக்ரி கூறுகையில்,  இத்தொகுதியில் களமிறக்கப்பட உள்ளூர் வேட்பாளரே  சிறந்த தேர்வாக அமைவார்.

ஏனெனில், உள்ளூர் வேட்பாளருக்கே இங்குள்ளவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்பதோடு அவரால் மட்டும்தான் இங்குள்ள மக்களின் நிலவரங்களையும் மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களையும் கொண்டு வர முடியும்.

வெளியிலிருந்து வருபவர்களுக்கு இங்குள்ள மக்களின் தேவைகளை உணர முடியாது, எங்கு யார் இருக்கிறார்கள், எந்தெந்த கிராமங்கள் எங்கு உள்ளன என்பது போன்றவை யாவும் தெரியாது.

ஆகையால் வெற்றி வேட்பாளராக கருதக்கூடிய சைட் அஹ்மாட் புத்ராவை பக்காத்தான் ஹராப்பான் சுங்கை சிப்புட் வேட்பாளராக களமிறக்க வேண்டும். எங்களின் கோரிக்கை பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment