சுங்கை சிப்புட்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்களை பிரதிநிதிக்கின்ற அரசியல் கட்சியான மஇகாவை விமர்சனம் செய்யும்போது எதிர்க்கட்சியினர் அரசியல் நாகரீகத்தை மீறக்கூடாது என்பதை உணர வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.
மஇகாவை 'மண் குதிரை' என வர்ணித்துள்ள ஜசெகவின் எம்.குலசேகரன், மஇகாவின் அரசியல் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் உணர்ந்து பேச வேண்டும்.
இந்நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதியாக கையெழுத்திட்ட மஇகா, இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் வாழ்வியல், பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதை மறந்து விடக்கூடாது.
எம்ஐஇடி கல்வி கடனுதவி வழி லட்சக்கணக்கான இந்தியர்களை பட்டதாரியாக்கியுள்ள மஇகா, இந்தியர்களின் வாழ்வாதார அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதோடு பல்வேறு ஆக்ககரமான திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதை மூடி மறைக்கக்கூடாது.
மஇகா செய்த நல்ல திட்டங்கள் எதையுமே கூறாமல் பொய்யான, பலவீனமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றும் சித்து வேலைகளை எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மணிமாறன் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment