Tuesday 17 April 2018

வெண்ணிலா ஆர்ட்ஸ் இந்திய கலை,கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் “நெஞ்சம் மறப்பதில்லை கலை நிகழ்ச்சி ”




பேராக் மாநில வெண்ணிலா ஆர்ட்ஸ் இந்திய கலை,கலாச்சார சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு “நெஞ்சம் மறப்பதில்லை” எனும் கலை நிகழ்ச்சி 2018 வரும் 19.4.2018 வியாழக்கிழம இரவு 8.02 மணிக்கு ஈப்போ ஒய்ஆர்எஸ்கே மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளதாக அதன் சங்கத்தின் தலைவர் எ.லோகநாதன் தெரிவித்தார்.
ஈப்போ பாராட் மஇகா தொகுதி தலைவர் டான்ஶ்ரீ டத்தோ கோ.ராஜு முன்னிலையில் தலைநகர், பேராக் பூசிங் நகரைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ரகுநாதன் பெருமாள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

அதோடு, 2018ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். பொது மக்கள் அனைவரும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதன் தொடர்பாக மேல் விபரங்கள் பெற 012-498 0533 (எ.லோகநாதன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



No comments:

Post a Comment