ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தன்னிச்சையாக போட்டியிட்டு தனது பெரும்பான்மை ஆதரவை நிரூபித்துக் காட்டுங்கள் என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து சவால் விடுத்தார்.
கடந்த இரு தவணைகளாக பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு வென்று தொகுதி மக்களை பல்வேறு சங்கடத்தில் ஆழ்த்திய ஜெயகுமாரினால் தொகுதி மக்கள் நன்மைகளை அடைந்ததை விட இன்னல்களையே அனுபவித்தனர்.
சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூட பிறரின் உதவியை நாட வேண்டிய அவலநிலைக்கு சுங்கை சிப்புட் மக்கள் குறிப்பாக இந்தியர்கள் தள்ளப்பட்டனர். வேதனையில் தவித்த மக்களுக்கு தேமுவும் மஇகாவும் தான் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களிடையே வளர்ச்சியை பதிவு செய்யாத டாக்டர் ஜெயகுமார், இனியும் தனக்கு செல்வாக்கு உள்ளது என கூறி கொள்ள முடியாது.
Advertisement
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் நாடாளுமன்ற உறுப்பினரின் கடமையாகும். ஆனால் டாக்டர் ஜெயகுமாரை தங்களது மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து மக்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு அரசியல் சூழலை உணர்ந்து இங்குள்ள மக்கள் தேமுவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர் என கூறிய இளங்கோவன், 'மாற்று அரசியல்' என சொல்லி இனியும் மக்களை தண்டிப்பதை டாக்டர் ஜெயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரின் கூற்றை இனியும் நம்பும் அளவுக்கு மக்கள் இல்லை என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment