Sunday, 8 April 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்துள்ளது- தேர்தல் ஆணையம்
புத்ராஜெயா-
இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை மக்களைவை சபாநாயகரிடமிருந்து நேற்றுபெற்றுள்ளதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.
அதேபோன்று பெர்லிஸ், மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களின் ஆட்சியும் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா தெரிவித்தார்.
பிற மாநிலங்களின் ஆட்சியும் கலைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை இன்னும் பெறவில்லை.
அனைத்து மாநிலங்களும் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கிடைக்கப்பட்டவுன் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான சிறப்பு கூட்டம் நடத்தப்படும் எனவும் அதில் வேட்பு மனு நாள், முன்கூட்டியே வாக்களிப்பு, வாக்களிப்பு தினம் ஆகியவை முடிவு செய்யப்படும் எனவும் அவர் சொன்னார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment