Monday, 2 April 2018

கட்சித் தேர்தலை காட்டிலும் பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள் - பிரதமர் நஜிப்


பெக்கான் -
கட்சித் தேர்தலை காட்டிலும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் முழு கவனம் செலுத்துங்கள் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோ உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசாங்கத்தை முடிவு செய்யக்கூடிய மிக முக்கிய தேர்தலாக 14ஆவது பொதுத் தேர்தல் திகழக் கூடிய சூழலில் அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் அதற்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதை விடுத்து கட்சித் தேர்தல் குறித்த சிந்தனையில் மூழ்கினால் ஆளும் அதிகாரத்தை இழக்கக்கூடிய அபாயம் ஏற்படலாம். அதனால் எவ்வித பயனும் இல்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாமல் கட்சி மிகப் பெரிய பதவி வகிப்பது என்பது அர்த்தமில்லாத ஒன்றாகும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் வகுத்துள்ள திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என பெக்கான் தேமு தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்த நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் நஜிப் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment