Wednesday 11 April 2018

மே 9இல் பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை-டத்தோஶ்ரீ மட்ஸிர்



கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் பள்ளி நாட்களில் நடைபெறவுள்ளதால் மே 9ஆம் தேதி நாடு தழுவிய நிலையிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மட்ஸிர் காலிட் அறிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு பள்ளி நாட்களில் வருமேயானால் சிறப்பு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக ஏற்கெனவே அவர் அறிவித்திருந்தார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு நாடு தழுவிய நிலையில் 10,200 பள்ளிகள் வாக்களிப்பு மையங்களாக செயல்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment