Wednesday, 11 April 2018

மே 9இல் 14ஆவதுபொதுத் தேர்தல்- மலேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பு



பெட்டாலிங் ஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 9ஆம் தேதி நடைபெறும் என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 587 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடத்தப்படும் இந்த பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது என அதன் ஆணையர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் பின் அப்துல்லா அறிவித்தார்.

இன்று காலை 10.00 மணியளவில்  நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீஸ், ராணுவப் படையினர் மே 5ஆம் தேதி வாக்களிப்பர் என அவர் கூறினார்.

கடந்த 7ஆம் தேதி பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தை கலைத்ததைத் தொடர்ந்து சரவாக் மாநிலம் தவிர பிற மாநிலங்களும் தங்களது சட்டமன்றத்தை கலைத்து 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்துள்ளன.



No comments:

Post a Comment