Saturday, 7 April 2018

ஏப்.7இல் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது- பிரதமர் நஜிப் அறிவிப்பு


புத்ராஜெயா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாளை 7ஆம் தேதி நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

நீண்ட நாட்களாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்த 14ஆவது பொதுத் தேர்தல் குறித்த ஆருடங்களுக்கு டத்தோஶ்ரீ நஜிப் முற்றுப்புள்ளி வைத்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு மாமன்னர் சுல்தான் முகமட் வி ஒப்புதலை பெறுவதற்கு முன்னர் நேரலையாக மக்களிடம்  அறிவிப்பு செய்தார் டத்தோஶ்ரீ நஜிப்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அடுத்து  சரவாக் மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களின் ஆட்சியும் கலைக்கப்பட்டு 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடப்படும் என்றார்.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆர்டிஎம் 1இன் வழி மக்களிடம் நேரலையாக உரையாற்றிய டத்தோஶ்ரீ நஜிப், மலேசியா தோல்வி கண்ட நாடு அல்ல எனவும் மக்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் வழி முன்னெடுக்கப்பட்டதையும் விவரித்தார்.

அதோடு தேசிய முன்னனி அரசாங்கம்  மக்களுக்காக வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment