Thursday, 19 April 2018

மஇகா போட்டியிடும் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் உறுதி- டத்தோஶ்ரீ சுப்ரா


கோலாலம்பூர்-

சுங்கை சிப்புட், தாப்பா, சிகாமட், கோத்தாராஜா, காப்பார் ஆகிய 6 தொகுதிகளில் மஇகா போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் உலு சிலாங்கூர், சுபாங், தெலுக் கெமாங் ஆகிய 3 தொகுதிகளின் நிலை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்த மூன்று தொகுதிகளில் மாற்றங்கள் உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் அதன் இறுதி முடிவை தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் கையில்  உள்ளது என  அவர் சொன்னார்.

தேசிய முன்னணி எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். இதுதான் எங்களின் கோட்பாடாக இருந்து வருகிறது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment