Wednesday, 18 April 2018

பேராவில் 4 நாடாளுமன்றம், 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டி- அமானா


ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பேரா மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமானா கட்சி போட்டியிடவுள்ளது என அதன் தலைவர் அஸ்னுமி அவி தெரிவித்தார்.

இத்தேர்தலில் வழக்கறிஞர், மருத்துவர், பட்டதாரிகள், பொறியியலாளர்கள் என நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

பாரிட் புந்தார், கோலகங்சார், பாரிட், லுமூட் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் செலாமா, தித்தி செரோங், செலின்சிங், சங்காட் ஜெரிங், கமுண்டிங், மஞ்சோய், சுங்கை ராப்பாட், ஆயர் கூனிங், கம்போங் காஜா, பாசீர் பாஞ்சாங், ருங்குப், பெராங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment