Friday, 20 April 2018

பேராவில் போட்டியிடும் 3 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பேரா மாநிலத்திலுள்ள மஇ காவின் 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிட்டதட்ட  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே அறியப்படுகிறது.

மஇகா போட்டியிடவுள்ள புந்தோங், சுங்காய், ஜெலாப்பாங் ஆகிய தொகுதிகளில் முறையே ஜெயகோபி, டத்தோ வ.இளங்கோ, தங்கராஜ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

பேரா மஇகாவின் முன்னாள் செயலாளரான ஜெயகோபி, கடந்த பொதுத் தேர்தலின் போதே புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிய போதிலும் அந்த வாய்ப்பு டத்தோ சி.சிவராஜுக்கு வழங்கப்பட்டது.

பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்து வரும் டத்தோ இளங்கோ, ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான அடிமட்ட வேலையை கடந்த. 2 ஆண்டுகளுக்கும் மேலாக  மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இறுதி நேர வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெலாப்பாங் வேட்பாளராக அறியப்பட்டுள்ள தங்கராஜ், பேரா மஇகாவின் செயலாளராகவும் மஇகா மத்திய செயலவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment