புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு நிலப்பட்டா ஏன் இன்னும் வழங்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம், 2008ஆம் ஆண்டு பேராக் மாநில ஆட்சியை பக்காத்தான் கூட்டணி வென்றபோது ஏன் உறுதி நிலப்பட்டா வழங்கவில்லை என புந்தோங் மைபிபிபி தலைவர் டத்தோ நரான் சிங் கேள்வி எழுப்பினார்.
130 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் நில விவகாரத்தை இப்போது சர்ச்சையாக்கும் சிவசுப்பிரமணியம், ஆட்சியை கைப்பற்றி மக்கள் கூட்டணி நிர்வாகத்தில் ஏன் இந்த ஆலயத்திற்கு நிலப்பட்டா வழங்கவில்லை?
10 மாதங்களாக மாநில ஆட்சியை மக்கள் கூட்டணி தன் வசப்படுத்தியிருந்தது. அப்போது இவ்வாலயத்திற்கு நிலப்பட்டா இல்லாதது சிவசுப்பிரமணியத்திற்கு தெரியாதா?
மேலும், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வேளையில் இவ்வாலய விவகாரம் குறித்து ஏன் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பவில்லை?
ஆலய நிலப்பட்டா விவகாரம் தொடர்பில் இப்போது சிவசுப்பிரமணியம் சர்ச்சையாக்குவது அவரது தனிபட்ட விளம்பரத்திற்கே அன்றி பொதுநல நோக்கு அல்ல என டத்தோ நரான் சிங் கூறினார்.
அதோடு, வரும் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றால் இவ்வாலயத்தின் நில விவகாரத்திற்கு தீர்வு காண்பதோடு இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களின் நில விவகாரங்களுக்கும் தீர்வு காண முற்படுவேன் என டத்தோ நரான் சிங் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment