Saturday, 14 April 2018

தேமு வேட்பாளர் பட்டியல்; ஏப்15இல் அறிவிப்பா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வியே இன்னமும் நீண்டுக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 25ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என அதன் தலைவர்களில் ஒருவரும் பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ வான் அஸிஸா அறிவித்தார்.

இந்நிலையில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார்? என்பது வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

புத்ரா உலக வாணிப மையத்தில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தேமு வேட்பாளர்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணியின் கூட்டணியில் அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், மைபிபிபி உட்பட இன்னும் சில கட்சிகளும் உள்ளடங்கியுள்ளன.

No comments:

Post a Comment