கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள மஇகா தயார் நிலையில் உள்ளது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தேர்தலை எதிர்கொள்வதற்கு 80 விழுக்காடு பணிகள் பூர்த்தியடைந்து விட்டன. இன்னும் களத்தில் இறங்கி பணியாற்றுவதுதான் மிச்சம் உள்ளது.
மஇகா போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் கூறினார்.
No comments:
Post a Comment