கோலாலம்பூர்-
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பொய் செய்தி தடுப்பு சட்ட மசோதா 123 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நேற்று நிறைவேற்றப்பட்டது.
அண்மைய காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பொய் செய்தி தடுப்பு சட்ட மசோதா நேற்று இரன்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதில் 'வன்மம் எண்ணத்தோடு' எனும் சொல் 'தெரிந்து' என்று
திருத்தப்பட்டதோடு 10 ஆண்டுகால தண்டனை 6 ஆண்டுகளாக திருத்தம் செய்யப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு 123 பேரின் ஆதரவு அளித்த நிலையில் 64 பேர் எதிராக வாக்களித்தனர்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேலவையில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் பேரரசரின் அங்கீகாரத்தை பெற சமர்பிக்கப்படும்.
No comments:
Post a Comment