Tuesday, 24 April 2018

தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளிக்கு வெ.10,000 நிதியுதவி-டத்தோ அமினுடின் வழங்கினார்!


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் வகுப்புகளுக்கான புதிய மேசை, நாற்காலிகளை வாங்குவதற்கு 10,000 வெள்ளியை நிதியுதவியாக வழங்கினார்  உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினரும் தம்புன் தொகுதி தே.மு தலைவருமான டத்தோ அமினுடின்.

தம்புன் தொகுதியில் செயல்பட்டு வரும் ஆதவன் இயக்கத்தின் தலைவர் கணேஷிடம் (uncle gun) பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன்  இந்த உதவியை நாடி உள்ளதாகவும் கணேஷ் தாம் பார்வைக்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் இன்று பள்ளிக்கு பார்வையிட வந்ததாகவும்  அமினுடின் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தன்னுடைய சேவை என்றும் மக்களுக்கு தொடரும் என கூறிய அவர்,  தேசிய முன்னணி கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

ஆதவன் இயக்கம் பள்ளியை பற்றி   கூறியவுடன் இந்த பள்ளிக்கு வருகைப் புரிந்ததோடு  கேட்ட உதவியை வழங்க முன்வந்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். அரசியல் நோக்கத்தோடு இங்கு வரவில்லை, மாறாக மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணதோடு இங்கு வந்துள்ளேன் எனவும் கூறினார்

அதோடு, ஆதவன் இயக்கத்தின் தலைவர் கணேஷ் பேசுகையில் தாம் இப்பள்ளியை தத்தெடுத்துள்ளதாகவும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தம்மிடம் மாணவர்களுக்கு மேஜை நாற்காலி தேவைப்படுகிறது எனவும் உதவி கோரினார்.

தாம் இவ்விவகாரத்தை டத்தோ அமினுடின் பார்வைக்கு கொண்டு சென்றதால் அவர் இப்பள்ளிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் ஆதவன் இயக்கத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
-

No comments:

Post a Comment