Tuesday, 20 March 2018

பாஸ் ஆதரவு பேரவையில் இணைந்தார் டத்தோ குமார் அம்மான்


கோலாலம்பூர்-

நியூஜென் கட்சியின் தலைவர் டத்தோ ஜி.குமார் அம்மான்  இன்று ககாசான் செஜாத்தாரா கூட்டணியிலும் பாஸ் ஆதரவு பேரவையிலும் அதிகாரப்பூர்வமாக இணைந்துக் கொண்டார்.

அதற்காக கடிதத்தை தலைநகரிலுள்ள பாஸ் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி அவாங்கிடம் அவர் வழங்கினார்.

டத்தோ குமார் அம்மான் மஇகாவின் முன்னாள்  தலைமைச் செயலாளராக  பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment