Friday, 9 March 2018

மனவளம் குன்றிய சிறார்களுக்குக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஶ்ரீ சாய் பிரியா


புனிதா சுகுமாறன்

புக்கிட் மெர்தாஜம்-
மனித இனத்தின் மிகப் பெரிய பொக்கிஷமே சிந்தனை திறன் ஆற்றல் தான். பிற உயிரினங்களிடமிருந்து மனிதன் வேறுபாடு காட்டி நிற்பதற்கு சிந்திக்கும் ஆற்றல்தான் வழிவகுக்கிறது.

மூளை செயல்பாட்டின் வழி சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொண்டு நல்லது, கெட்டதை ஆராய்ந்து தேவையானதை எடுத்துக் கொண்டு தீயதை விட்டு விலகி நிற்பதால்தான் மனிதன் இன்னமும் மனிதனாகவே இருக்கிறான்.

ஆனால் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து தனது எதிர்கால நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் சிறப்பு குழந்தைகளின் வாழ்வியலை கல்வியின் மூலம் மேம்படுத்தி வருகிறார் ஆசிரியை ஶ்ரீ சாய் பிரியா.

தனது ஶ்ரீ சாய் பிரியா பாலர் பள்ளியின் மூலம் மனவளம் குன்றிய சிறார்களை பராமரித்து, சாதாரண மனிதர்களை போல் அவர்களும் சமுதாயத்தில் உலா வர வேண்டும் என நோக்கில் சிறப்பு வகுப்புகளை நடத்தி  வருகிறார் ஶ்ரீ பிரியா.

மனவளம் குன்றிய சிறார்களுக்கு கல்வியை பயிற்றுவிப்பதற்கான அடிப்படை கல்வியை வெளிநாட்டில் பயின்று, தற்போது புக்கிட் மெர்தாஜம் பகுதியில் சொந்த பாலர் பள்ளியை வழிநடத்தி வரும் ஶ்ரீ பிரியாவுடன் 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்டது.

அவருடனான சிறப்பு நேர்காணல் விரைவில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment