கோலாலம்பூர்-
மலேசிய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள தொகுதி எல்லை சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து பெர்சே அமைப்பு இன்று மக்களவை சபாநாயகரிடம் மனுவை சமர்ப்பித்தனர்.
இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட பேர்சே ஆதரவாளர்களில் 10 பேர் மட்டும் உள்ளே நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சஹாருடின் அப்துல்லா கூறினார்.
துகு நெகாராவில் திரண்ட 200க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி வந்தனர். இந்த பேரணியில் எவ்வித விரும்பதாக செயல்களும் இடம்பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.
இதில் பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா, அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment