ரா.தங்கமணி
ஈப்போ-
நாடு தழுவிய நிலையில் 5,000க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு ஒரு வலுவான இயக்கமாக உருவெடுக்க மலேசிய அபிராம் இயக்கம் இலக்கு கொண்டுள்ளது என அதன் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் தெரிவித்தார்.
சமூலநல நடவடிக்கைகள் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் மக்களுக்கான திட்டங்களை மலேசிய அபிராம் இயக்கம் முன்னெடுத்து வருகிறது.
இந்திய சமுதாயம் பின்னடைவை சந்தித்து விடக்கூடாது எனும் இலக்கில் பயணிக்கும் இவ்வியக்கம், மக்களுக்கு ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அவ்வகையில் வரும் ஏப்ரல் மாதம் மிகப் பெரிய அளவில் ஶ்ரீ சஹஸ்ரநாம லலிதாம்பிகை பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி, பொருளாதாரம், சமூகநலன், நாட்டுப் பற்று, சமயம் என அனைத்து ரீதியிலும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆக்ககரமான திட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றன என்று அண்மையில் இவ்வியக்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு
சொன்னார்.
இந்த ஆண்டுக்கூட்டத்தில் இயக்கத்தின் செயல் நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு இயக்கத்தை இன்னும் வலுவடையச் செய்வதற்கு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட செய்வதும் நாடு தழுவிய நிலையில் பல தொகுதிகளை அமைப்பதும் முன்னெடுக்கப்படுவதும் திட்டமிடப்பட்டுள்ளது என சண்முகம் கூறினார்.
இந்த கூட்டத்தில் இயக்கத்தின் ஆலோசகர் அமுசு. ஏகாம்பரம், பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவில் திருமதி தங்கராணி, இயக்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கரன் துரைசாமி, செயலாளர் பி.கணேசன் உட்பட செயலவையினரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment