Thursday, 8 March 2018
இரு தவணைகளுக்கு மட்டுமே பிரதமர் பதவி; லிம் குவான் எங்
கோலாலம்பூர்-
வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) கைப்பற்றினால் பிரதமர் பதவி உட்பட மந்திரி பெசார், முதலமைச்சர் ஆகிய பதவிகளை இரு தவணைகளுக்கு மட்டுமே என கட்டுப்படுத்த அக்கூட்டணி இலக்கு கொண்டுள்ளதாக ஜசெக பொதுச் செலயாளர் லிம் குவான் எங் கூறினார்.
இந்த பதவிகளை இரு தவணைகளுக்கு மட்டுமே என கட்டுப்படுத்துவதன் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றில் அதிகாரப் பிரிவு இருப்பதை உறுதி செய்ய இது அவசியமாகிறது.
இந்த பரிந்துரையை அமல்படுத்துவதற்கு நாங்கள் கட்சிகளின் சம்மதத்தை மட்டும் பெறவில்லை. மாறாக, நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள இதர கட்சிகளின் சம்மதத்தையும் பெறுகிறோம். இந்த பரிந்துரையை சில தரப்பினர் நிராகரித்து வருகின்றனர். ஆயினும் பெரும்பாலானோர் பதவி தவணைக் காலத்தை கட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என அவர் கூறினார்.
இந்த விவகாரம் நேற்று நடைபெற்ற அக்கூட்டணியின் பொதுத்தேர்தல் வாக்குறுதி தொடர்பான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் பிரதமர் பதவி தவணைக் காலத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை அதன் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் உறுதிபடுத்தினார்.
இதனிடையே, முன்னாள் பிரதமரான துன் மகாதீர் 1981 முதல் 2003ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment