Thursday, 8 March 2018

குடிநீர் விநியோக தடை; ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் - ஷபாஸ்



கோலாலம்பூர்-
சுங்கை சிலாங்கூரின் மூன்றாவது கட்டத்தில் உள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது பார்க்கும் பணி தொடர்வதால் கோலாலம்பூர்- சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோக தடை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என ஷபாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த குடிநீர் விநியோகத் தடையால் ஒன்பது இடங்களுக்கு லோரிகளின் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம்,  குழாய் பழுது பார்ப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென நிகழ்ந்த
விபத்தின் காரணமாக பழுது பார்ப்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கோலா லங்காட், உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை ஆறு மணி அளவில் குடிநீர் சேவை வழக்க நிலைக்கு திரும்பும் எனவும் கோலாலம்பூர், கோம்பாக், கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா போன்ற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் குடிநீர் சேவை வழக்க நிலைக்கு திரும்பும் என சிலாங்கூர்  மாநில குடிநீர் விநியோக நிறுவனமான  ஷபாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment