ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
டோவன்பி தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை முதலே பால்குட அபிஷேகத்துடன் தொடங்கிய ஆலய திருவிழாவில் பக்தர்கள் காவடிகளை ஏந்தி வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த ஆலய திருவிழாவுக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்
ஜெயகுமார், ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோ, தொழிலதிபர் யோகேந்திரபாலன், ஜாலோங் சட்டமன்றத் தொகுதி கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ, டோவன்பி தோட்ட மேலாளர் ஆனந்தராஜா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வகைகளில் நல்லுதவி வழங்கிய அனைத்து அன்பர்களும் வட்டார இளைஞர்களுக்கும் ஆலயத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆலயத் தலைவர் மனோகரன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment