Thursday 15 March 2018
நாளை வெளியாகிறது எஸ்பிம் தேர்வு முடிவுகள்
கோலாலம்பூர்-
2017ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் நாளை 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 10.00 மணி தொடங்கி மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தங்களின் தேர்வு முடிவுகளை பெற்று கொள்ளலாம். அதோடு, எஸ்எம்எஸ் வாயிலாகவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 15888 என்ற எண்ணிற்கு அனுப்பி தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
தனியார் முறையில் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் தபால் வாயிலாக அனுப்பப்படும். அல்லது மாணவர்கள் அருகில் உள்ள மாநில கல்வி இலாகாவிடம் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த 2017ஆம் ஆண்டில் 444,883 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment