Monday, 19 March 2018

கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ விபத்து; புலன் விசாரணை நடத்தப்படும்


கோலாலம்பூர்-

கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீச்சம்பவம் தொடர்பில்  புலன் விசாரணை விரிவாக நடத்தப்படும் என கோலாலம்பூர் மாநகர் தீயணைப்பு, மீட்புப் படை பிரிவின்  இயக்குனர் கிருடின் தரமான் தெரிவித்தார்.

நேற்று நண்பகலில் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அறை ஒன்றில் தீ பிடித்தது. இந்த தீச்சம்பவத்திற்கு மின்சாரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என் சந்தேகிக்கப்படுகிறது.

தீ விபத்து நிகழ்ந்த அறை கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்த வேளையில் அதனுள் 163  ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருந்தன. அங்கு தீ பரவியிருந்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும்.

இச்சூழலில் மருத்துவமனை பொறியியல் பிரிவினர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய செயல் பாராட்டுக்குரியது ஆகும்.

இதன் தொடர்பில் விரிவான  புலன் விசாரணை நடத்தப்படும் என கூறிய அவர், தீயணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 99 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment