Wednesday, 21 March 2018

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்



சென்னை-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின்  கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சில காலமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடராஜன் காலமானதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அஞ்சலிக்கான நடராஜனின் நல்லுடல் சென்னை, பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊழல் வழக்கு தொடர்பில் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவசர பரோலில் இன்று வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment