Saturday, 3 March 2018

சுங்கை குருடா தோட்ட ஆலய திருவிழா

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை குருடா ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா நேற்று மிகச் சிறப்பான முறையில்  கொண்டாடப்பட்டது.

மாசிமக பெருவிழாவை  முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் இத்தோட்ட ஆலயத்தின் திருவிழாவும்  மாசிமக நாளில் கொண்டாடப்படுகிறது

இந்த  ஆலய திருவிழாவில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக பக்தர்கள் காவடிகளை ஏந்தி வந்தனர்.

ஆலயத் திருவிழாவில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார்,  லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்ளி, தோட்ட மேலாளர் சிவராஜ், ஆலயத் தலைவர் கி.பாண்டியன், சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், மதிலன் நிறுவன உரிமையாளர் யோகேந்திர பாலன் உட்பட பல பிரமுகர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment