Sunday 11 March 2018

தாய்மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நாட்டம் செலுத்துங்கள்- டத்தோ டி.மோகன்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மாணவர்கள் தங்களது தாய்மொழி மட்டுமின்றி பிற மொழிகளிலும் புலமை பெற்றவர்களாக திகழ வேண்டும் என்று செனட்டர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்

பேராக் இந்தியர் வர்த்தக சபை ஏற்பாட்டில்  இன்று நடைபெற்ற மாணவர்களுக்கான 2 நாள் பயிற்சி பட்டறை நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட அவர்  உரையாற்றுகையில், இன்றைய காலகட்டத்தில் இந்திய மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் குறிப்பாக ஆங்கிலம்,  சீன மொழிகளில் புலமை பெற்றவர்களாக திகழ்ந்தால் சிறப்பானதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

தாய்மொழி என்பதை பிறர் நமக்கு போதிக்க வேண்டியது. அது நமது பிறப்பின்போதே நம்முடன் தொடங்கி விடுகிறது. ஆதலால் தாய்மொழியை யாரும் கட்டாயப்படுத்தி திணிக்க வேண்யதில்லை. வீட்டில் குடும்பத்தினருடன் உரையாடினாலே தாய்மொழி பயன்பாடு நம்மிடம் தொடங்கி விடும்.

ஆனால் தேசிய மொழி, ஆங்கிலம், சீன  மொழிகள் அவ்வாறு இல்லை. அதை நாம் பயில வேண்டும். ஆங்கிலம், சீன மொழிகளில் பயன்பாடு உலகளாவிய நிலையில் அத்தியாவசியமாகி உள்ளதால் இந்த மொழிகளையும் கற்றுக் கொள்ள மாணவர்கள் தயக்கம் காட்டக்கூடாது.

இதுபோன்ற பயிற்சி பட்டறைகளில்  கலந்துகொண்டால் போதும் என்ற மனநிலையில் மாணவர்கள் இருக்கக்கூடாது.  இந்த பட்டறையில் தமக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு வாழ்க்கை தரத்தை எவ்வாறு மாற்றிகொள்ள முடியும் என்பதை சிந்தித்து  அதற்கேற்ப செயல்பட வேண்டும்  என மஇகா உதவித் தலைவருமான டத்தோ மோகன் குறிப்பிட்டார்.

மேலும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் அங்குமிங்கும் பொருளாதார உதவிகளை நாடி நமது  மாணவர்கள்க்கு சிறந்த பேச்சாளர்களை வரவழைத்து பயனுள்ள நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்போது மாணவர்கள் அதை வரவேற்க வேண்டும்

எங்கள் காலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து தந்துள்ளது.  மாணவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவெண்டும் என  அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment