Friday 16 March 2018

எஸ்பிஎம் முடிவுகள்; சிறந்த அடைவுநிலையை பதிவு செய்துள்ளனர் புந்தோங் ஶ்ரீ புத்ரி இடைநிலைப்பள்ளி மாணவர்கள்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் நாடு தழுவிய நிலையில் பல மாணவர்கள் சிறந்த தேர்ச்சி அடைவு நிலையை பதிவு செய்துள்ளனர்.

ஈப்போ, புந்தோங் ஶ்ரீ புத்ரி இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த நித்யா தேவி (11ஏ), ரிச்செல் கீர்த்தனா (10ஏ), திவ்யாஷினி (10ஏ),   கிவேன் ஸ்டெஃபெனி வில்லர்பா (9ஏ), கிஷாலினி (8ஏ), யுகேஸ்வரி (8ஏ), பிரதீபா (7ஏ), ஹேமா பிரியா (7ஏ), அஸ்ராபானு (7ஏ), சரண்யா (7ஏ), பவதாரணி (7ஏ), சுகாஷினி (7ஏ), கெளசல்யா (6ஏ) ஆகியோர் சிறப்பான தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளன்னர்.

கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வை 153 மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் 13 பேர் சிறந்த அடைவு நிலையை பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment