ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் அந்தந்த தொகுதிகளில் பிரச்சினைகளை முழுமையாக அறிந்தவர்களாக இருப்பதில்லை. இதனாலேயே மக்களால் புறக்கணிக்கப்படும் சூழலுக்கு சில வேட்பாளர்கள் தள்ளப்படும் அவலநிலை தொடர் கதையாகின்றது' என பேராக் மாநில மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் நோர் ஃபட்சில் பின் சாஹுல் ஹமிட் கூறினார்.
தேர்தல் காலத்தின்போது களமிறங்கும் வேட்பாளர்கள் அங்குள்ள அடிப்படை அறிந்திருப்பார்களா? என்பதே தற்போதைய மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
ஆனால் அங்குள்ள சூழல் வேறு, இங்கிருக்கும் சூழல் வேறு. கோலாலம்பூர், சிலாங்கூரில் வாழும் மக்களின் நிலை வேறு. அவர்களின் வாழ்வாதாரம், வசிப்பிட சூழல் ஆகியவை இங்கு மாறுப்பட்டிருக்கும். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மிக எளிமையான சூழலில் காணப்படுகிறது.
இந்த எளிமையான சூழல் தலைநகரிலிருந்து வரும் வேட்பாளர்களால் உணர முடியாது. அங்குள்ள சூழலையே இங்கு அவர்கள் காண்பிக்கும்போது வேட்பாளருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது. இந்த இடைவெளியே வேட்பாளரின் தோல்வியை தீர்மானிக்கிறது என 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின்போது அவர் விவரித்தார்.
அவருடனான சிறப்பு நேர்காணல் விரைவில் 'மை பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment