ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு ஏதுவாக மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சியிடம் வீழ்ந்து கிடக்கும் இத்தொகுதியை வரும் பொதுத் தேர்தலில் மீட்டெடுக்க வேண்டும் என மஇகா தலைமைத்துவம் கங்கணம் கட்டியுள்ளது.
அதன் தொடர் நடவடிக்கையாகவே சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக டத்தோ சோதிநாதனை மஇகா தலைமைத்துவம் களமிறக்கியுள்ளது.
ஒருங்கிணைப்பாளராக களமிறங்கியுள்ள டத்தோ சோதிநாதனே இத்தொகுதியின் தேமு வேட்பாளராக களமிறப்படுவாரா? அல்லது இறுதி நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் நிகழுமா? என்பது தெரியாமல் மஇகாவினர் விழி பிதுங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment