Saturday, 3 March 2018

'வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்..' அதிரடி காட்டியுள்ள ரஜினியின் 'காலா' டீசர்



சென்னை-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'காலா' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனை பார்வையிட்டுள்ளனர்.

'கபாலி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் தனுஷின்  வொண்டார் பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது 'காலா' திரைப்படம்.

இதில் நடிகர்கள் சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், திலீபன், ஹூமா குரெஷி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த டீசரில் கருப்பு சட்டை அணிந்து மாஸ் காட்டியுள்ள ரஜினிகாந்த், 'கறுப்பு உழைப்போட வண்ணம்', 'வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா வாங்கலே' என அதிரடியான வசனங்களின் மூலம் மீண்டும்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment