Thursday, 8 March 2018

சிலாங்கூரை தேமு கைப்பற்றுவதற்கான முதன்மையான 5 காரணங்கள்- நஜிப் விவரித்தார்


உலு சிலாங்கூர்-
சிலாங்கூர் மாநிலத்தை தேசிய  முன்னணி கைப்பற்றுவதற்கான ஐந்து முதன்மை காரணங்களை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்வைத்தார்.

நீர் வழங்கல் பற்றாக்குறை, மேம்பாட்டு- சொத்துடைமை மீது அதிக வரி விதிப்பு, குப்பை, மாசு, டிங்கி நோய் பரவல் போன்ற பிரச்சினைகளை களைவதில் தற்போதைய மாநில அரசு  தவறிவிட்டது.

'இந்த ஐந்து முதன்மை காரணங்களை நாம் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் (ஏன் தேசிய முன்னணிக்கு சிலாங்கூர் மக்கள் வாக்களிக்க வேண்டும்).

நமக்கு அரசியல் சக்தி இல்லாவிட்டால் இந்த பிரச்சினைகளை ஒவ்வொன்றாக கூட தீர்க்க முடியாது என சிலாங்கூர் மாநில தேமு தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரும் கோலாலம்பூரும் தேசிய முன்னணியின் நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைப்பட்டிருந்தால் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல மேம்பாடுகளை கொண்டு வந்திருக்க முடியும் என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளே முரண்பாடு கொண்டு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதே கடந்த பொதுத் தேர்தலின்போது இந்த மாநிலத்தை இழந்ததற்கான முதன்மை காரணமாகும். ஆதலால் வரும் பொதுத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மசீச தலைவர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment