புத்ராஜெயா-
மர்மமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானச் சம்பவம் நடந்து நாளையுடன் நான்காண்டுகள் எட்டுவதையொட்டி அந்த விமானம் தொடர்புடைய கூடுதல் விசாரணை தகவல்களை மலேசிய அனைத்துலக சிவில் போக்குவரத்து அமைப்பு வெளியிடவுள்ளது.
விசாரணை குழுவின் தலைவர் டத்தோ கோக் சூ சோன் இந்த கூடுதல் தகவல்களை ஆர்டிஎம் 1 (RTM 1) அலைவரிசையின் மூலம் பிற்பகல் 3.30 மணிக்கு நேரலையாக வெளியிடுவார் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்தார்.
இந்த துயரச் சம்பவத்தின் ஆண்டு நிறைவு விழாவின்போது வருடந்தோறும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.
இந்த அறிக்கை எம்எச் 370 அகப்பக்கத்தில் (www.mh370.gov.my) அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு விவரிக்கப்படுவதோடு பொதுவில் 3.00 மணிக்கு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேற்றப்படும்.
கடந்த 2014 மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் சீனா,பெய்ஜிங்கிற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எம்எச் 370 சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment