கோலாலம்பூர்-
மாயமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தை தேடுவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8, 2014இல் கோலாலம்பூரிலிருந்து சீனா,பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த எம்எச் 370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது.
இந்த சம்பவம் நடந்து 4 ஆண்டுகளை எட்டுகின்ற நிலையில் , எம்எச் 370
மலேசியர்களின் மனதிலும் பிரார்த்தனையிலும் எப்போதும் இருக்கும் என பதிவிட்டுள்ள டத்தோஶ்ரீ நஜிப், அந்த விமானத்தை தேடுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.'
'அண்மைய தேடலின்போதும், எம்எச் 370இல் பயணித்தவர்களின் நிலையை கண்டுபிட்ரிக்க நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்' என டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.
எம்எச் 370 விமானம் காணாமல் போனது மலேசியர்களை மட்டுமல்லாது உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
No comments:
Post a Comment