Friday, 9 March 2018

"மீண்டு வா"; நான்காண்டு நினைவலைகளில் 'எம்எச் 370'


கோலாலம்பூர்-
239 பயணிகளுடன் காணாமல் போன எம்எச் 370 விமான துயரச் சம்பவம் இன்றுடன் நான்காண்டுகளை துயரத்துடன் கடந்து நிற்கிறது.

அன்புக்குரிய உறவுகளை தவிக்கவிட்டு மாயமாகி போன எம்எச் 370இன்
'வேதனை துளிகள்' இன்று உலக அளவில்  பேசும் பொருளாகவே உள்ளது.

உறவுகளை காண்பதற்கும், தொழில் நிமித்தமாகவும், உயர்கல்வி பயில்வதற்காகவும், நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் விடுமுறை பொழுதை இனிமையாக கழிக்கவும் எம்எச் 370 விமானத்தின்  இருக்கையில் அமர்ந்த 'உறவுகள்' விண்ணில் மாயமாகி போனதன் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் தவிக்கும் உறவுகளின் வேதனை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.

மரணத்தின் வேதனை கூட சில நாட்கள்தான் நீடிக்கும். ஆனால் அன்புக்குரிய உறவுகளுக்கு என்ன நேர்ந்தது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கும் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதர- சகோதரிகள், உறவினர்கள், நண்பர்களின் 'மன வேதனை' ஆறாத 'வடு' நீடிக்கின்றது.

எம்எச் 370 இந்தியப் பெருங்கடலில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த 'இரும்பு பறவை' மீண்டும் தனது தாயகம் திரும்பி விடாதா? என்ற ஏக்கத்தோடு உறவுகள் இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றன.

உறவுகள் மட்டுமல்லாது 'வேதனை கண்ணீரில்' உறவுகளாய் ஒன்றிணைந்த மலேசியர்களும் உலக மக்களும் வேண்டிக் கொள்கிறோம் "உறவுகள் விழிகளில் நீரினை துடைத்திட வா... வா..."

No comments:

Post a Comment