Wednesday, 21 March 2018
36 பேர் மீதான வழக்கு ஏப்.24க்கு ஒத்திவைப்பு
ஈப்போ-
குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டதன் பேரில் கைது செய்யப்பட்ட 36 பேர் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தாப்பா, பத்துகாஜா, தைப்பிங் ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட இந்த 36 பேரும் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஈப்போ மாஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டவர்களுக்கு எதிராக புதிய ஆவணங்களை இன்னும் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக் கொண்டததாலும் புதிய தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வரும் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி முர்தாஸடி தெரிவித்தார்.
கிந்தா மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் பேரில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment