குவாந்தான் -
தூக்க கலக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு அந்நிய நாட்டவர்கள் மரணமடைந்ததோடு அறுவர் படுகாயம் அடைந்தனர்.
வங்காளதேச நாட்டவர்களை ஏற்றி கொண்டுச் சென்ற வேன் பிறபகல் 4.45 மணியளவில் குவாந்தான், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1, 1214ஆவது கிலோ மீட்டரில் தடம் புரண்டது.
இதில் இரு வங்காளதேசிகள் மரணமடைந்தனர். இதில் மரணமடைந்த ஒருவர் குத்தகை தொழிலாளர் ஹுசேய்ன் ஃபோர்ஹாட் (36) என அடையாளம் காணப்பட்ட வேளையில் மரணமடைந்த மற்றொரு நபர் அடையாளம் காணப்படவில்லை என தெமர்லோ போலீஸ் தலைவர் ஏசிபி ஸுன்டின் மாமூட் கூறினார்.
இதில் நிஸான் வேனை செலுத்திய பொறியியல் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான முகமட் கமருல் பஹரின் (52) காயமடைந்தார்.
"வேனை செலுத்திய ஆடவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் சாலை தடுப்பை மோதி கால்வாயில் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது என அவர் சொன்னார்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களும் மரணமடைந்தவர்களின் உடலும் சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment