Monday 5 March 2018

சொந்தத் தொழிலில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது- சஹாரா எண்டெர்டெய்மென்ட் ஜீவன் -பகுதி 2

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒரு துறையில் முழுமையாக ஈடுபடும் முன்னர் அத்துறையை பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் வெற்றி பெற முடியும்.

அதேபோன்று நாம் செய்யும் தொழிலின் உபகரணப் பொருட்களை கவனமாக பராமரித்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பணி செய்யும்போது அதில் இடையூறோ பிரச்சினையோ ஏற்பட்டால் பின்னாளில் அதுவே நமது தொழில் நற்பெயருக்கு களங்கமாக அமைந்து விடலாம் என்கிறார் சஹாரா எண்டெர்டெய்மென்ட்  நிறுவனத்தின் உரிமையாளர் ஜீவன்.

அவருடன் 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சி...

கே: உங்கள் வெற்றிக்கு ஆதரவாக இருந்தவர்கள்?
: முதலாவதாக என் மனைவி.  நான் செல்லும் நிகழ்வுக்கான பாடல்களை எழுதி தருவது, முன்கூட்டியே பாடல்களைப் பாடச் சொல்லி பயிற்சி வழங்குவது, நிறைய அடிப்படை விஷயங்களை எனக்கு சொல்லி தருவது போன்றவற்றில் எனக்கு பக்கபலமாக இருப்பார்.

அதனை அடுத்து எனது பணியாளர்களான சுரேஸ், திரு ,தென்னரசு, பிரவின், மைக்கல் ஆகியோர். இவர்கள் அனைவரும் எனக்கு எவ்வேளையிலும் என்னுடன் பக்கபலமாக இருந்து என்னை கைகொடுத்து தூக்கிவிட்டவர்கள் ஆவர்.  ஊதியத்திற்கு  பணியாற்றி வருகிறோம் என்றில்லாமல் அவர்கள்  இதனை சொந்த வேலையாக கருதி பணியாற்றி வருகிறார்கள்.

இன்று கலைநிகழ்வுகளில் மிளிர்கிறேன் என்றால் அதற்கு காரணம்  ராஜேஸ் கெட்டரிங் உரிமையாளர்தான். இன்று என்னை ஒரு சிற்பியாக செதுக்கியவர்கள்  கலை, சக்திதான். என்னை இன்று இத்துறையில் அதிகளவு அறிமுகம் செய்தவர்கள் இவர்கள்தான் என்பதை  இவ்வேளையில் கூறி கொள்வதில்  பெருமை கொள்கிறேன்.

கே: வரும் காலங்களில் உங்கள் சாதனை?
: வயது வித்தியாசம் பார்க்காவிட்டால் ஒரு தொலைக்காட்சி அல்லது வானொலி அறிவிப்பாளராக உருவெடுக்க வேண்டும் எனும்  ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிட்டினால் பகுதி நேரமானாலும், முழுநேரமானாலும் அதனை முழுமையாக  பயன்படுத்தி கொள்வேன்.

கே: ஒலி, ஒளியமைப்பு துறை பற்றி கூற விரும்புவது?

: நான் ஒரு இசை (Muzik) பிரியர், நான் வைத்திருக்கும் ஒலி, ஒளியமைப்பு சாதனங்கள் அனைத்தையும் முறையாக பராமரித்துக் கொள்வேன். இதுவரை எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல்  எனது  ஒலி, ஒளியமைப்பை பார்த்துக் கொள்கிறேன். என்ற தமக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய பாரதம் மின்னியல் செய்தி தொகுப்புக்கு தமது நன்றிகலை தெரிவித்துகொண்டார்.

No comments:

Post a Comment