Wednesday, 21 March 2018
எம்எச் 17 விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக குற்றஞ்சாட்டிய கேப்டன் தற்கொலை
கோலாலம்பூர்-
மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச் 17 விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக குற்றஞ்சாட்டிய கேப்டன் விலாடிஸ்லாவ் வோலோஷின் தன்னை தானே சுட்டுக் கொண்டதாக உக்ரேய்ன் ஊடகங்கள் கூறுகின்றன.
வொலோஷின் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை புரிந்து கொண்டதாக உக்ரேய்ன் போலீசை மேற்கொள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ரானுவ வீரரின் துப்பாக்கியை போலீஸ் கண்டெடுத்துள்ளது. அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
உக்ரேய்னில் ஒரு போர் வீரராக விவரிக்கப்பட்ட வோலோஷின், கிழக்கு உக்ரேய்னில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக எஸ்யூ-25 தரைப்பட தாக்குதலில் 33 போர் விமானங்களை தகர்த்துள்ளார் என பிபிசி நியூஸ் கூறுகிறது.
எம்எச் 17 விமானத்தை வோலோஷின் சுட்டு வீழ்த்தினார் என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ள போதிலும் சுயேட்சை நிபுணர்கள் இந்த கூற்றை நிராகரித்துள்ளனர்.
இவர்களின் கூற்றுபடி ரஷ்ய ஆதரவு படை போராளிகள் ஏவிய ஏவுகணையாலே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என கூறுகிறது.
தற்கொலை செய்து கொண்ட வோலோஷின் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக உக்ரேய்ன் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த 2014 ஜூலை 7ஆம் தேதி 298 பயணிகளுடன் கிழக்கு உக்ரேய்வின் வான்வெளி பகுதியில் பறந்த எம்எச் 17 விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினரால் ஏவுகணை மூலம் சுட்டு வீழத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment