Monday, 19 March 2018

10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஶ்ரீ சரவணன் வெற்றி பெற வேண்டும்- டத்தோ இளங்கோ


ரா.தங்கமணி

தாப்பா-
கடந்த 12ஆவது பொதுத் தேர்தலில் 'அரசியல் சுனாமி' ஏற்பட்டபோதிலும் கூட  தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை வெற்றி கொண்டது தேசிய முன்னணி.

இன்னமும் தேமுவின் வெற்றி கோட்டையாக திகழும் இத்தொகுதியில் 'வெற்றி வேட்பாளரான' டத்தோஶ்ரீ எம்.சரவணனனே வேட்பாளராக களமிறக்கப்படுவார் என பேராக் மாநில மஇகா  தலைவர் டத்தோ வ.இளங்கோ கூறினார்.

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக திகழும் டத்தோ சரவணன், இங்கு களமிறக்கப்பட்டால் மீண்டும் தேமுவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கூறிய அவர், தேசிய முன்னணியின் கோட்டையாக தாப்பா தொகுதி திகழும் என்றார்.

பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதாரணமாக திகழ்கின்ற அவர், மீண்டும் இங்கு போட்டியிடும் சூழலில்  10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை கட்சி உறுப்பினர்களும்,  வாக்காளர்களும் உறுதி  செய்ய வேண்டும் என இங்கு நடைபெற்ற தாப்பா மஇகா தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும் நிகழ்வில் உரையாற்றியபோது டத்தோ இளங்கோ இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment