Thursday, 22 February 2018

சேதமடைந்த வீடுகளில் இந்தியக் குடும்பங்கள்; விரைவில் சீரமைக்கப்படும்- டத்தோஶ்ரீ ஸம்ரி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மிக மோசமான சூழலில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியக் குடும்பங்களின் வீடுகளை மாநில அரசு நிர்மாணிக்கும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.

கரையான் அரிப்பினால் பாதிகப்பட்டுள்ள இம்மூன்று வீடுகளை வீடுகளை யயாசான் பினா உபாயா (ஒய்பியூ) சீரமைத்துக் கொடுக்கும் என்ற டத்தோஶ்ரீ ஸம்ரி, இவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இன்று புந்தோங் வட்டாரத்திற்கு வருகை புரிந்த டத்தோஶ்ரீ ஸம்ரி, புந்தோங் ஜெயா 3இல் வசித்து வரும் மாற்றுத் திறனானியான ஒய்.காந்தன், புந்தோங் 2இல் இரு சகோதரிகளுடன்  வசித்து வரும் மூதாட்டி தவமணியம்மாள் தேவி த/பெ தம்பிதுரை, கம்போங் கச்சான் பூத்தே,  லாலுவான் சுங்கை பாரி 18இல்  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர், மாற்றுத் திறனானியான சகோதரருடன் வசித்து வரும் டலிப் சிங் த/பெ சிங்ஹாரா சிங் ஆகியோரின் இல்லங்களை மாநில அரசு புதுபித்துத் தரும் என மேலும் கூறினார்.

வெளியே தான் இம்மூன்று
வீடுகளும் சிறப்பம்சமாக காட்சி தரும் வேளையில் உள்ளே பலகைகள் கரையானால் அரிக்கப்பட்டு மிக மோசமான சூழலில் உள்ளன என்பது குறிப்பிடத்து.

இந்நிகழ்வின்போது மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, மாநில மந்திரி  பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வி.இளங்கோ, ஈப்போ பாராட் மஇகா தலைவர் டத்தோ ஜி.இராஜு, புந்தோங் தொகுதி மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங், பேராக் மாநில மகளிர் மேம்பாட்டு இயக்கத்தின்  தலைவி குமாரி கெளரம்மா, மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி தங்கராணி உட்பட பலர் உடன் வந்தனர்.

No comments:

Post a Comment