Sunday, 18 February 2018

மெக்சிகோவை உலுக்கியது நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கின



மெக்சிகோ சிட்டி-
ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவான நிலநடுக்கம் உலுக்கியதில் மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின.

பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் 53 கிலோமீட்டர் தொலைவில் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் தங்களை வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கவுதமாலா நாட்டின் தெற்கு பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.  ஆயினும் இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதங்கள் எதுவும் அறியப்படவில்லை.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெக்சிகோவை உலுக்கிய கடுமையாக நிலநடுக்கத்தில் 369  பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment