ரா.தங்கமணி
ஈப்போ-
"பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை 'மாற்றான்' பிள்ளைகளாக ஆசிரியர்கள் கருதக்கூடாது. தங்களது சொந்த பிள்ளைகளை போல் ஆசிரியர்கள் மாணவர்களை கருதினாலே அசம்பாவிதச் செயல்களை தவிர்க்க முடியும்' என்று மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி கூறினார்.
மாணவி வசந்தபிரியா மரணத்தில் நிகழ்ந்துள்ள அசம்பாவிதம் இனி யாருக்கும் நிகழக்கூடாது. சிறுமி வசந்தபிரியாவை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட அவர், 'பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆசிரியர்களை நம்பியே பள்ளிக்கு அனுப்புகின்றனர்'.
பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்களை தங்களது சொந்த பிள்ளைகளை போல் கருத வேண்டும். அவர்களை 'மாற்றன்' பிள்ளையாக கருதுவதால் மட்டுமே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் நாம் தவறாக குறிப்பிடப்பிட முடியாது. ஆனால் யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் குற்றஞ்சாட்டப்படுவதை அவர்கள் உணர வேண்டும்.
பலவீனமாக மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். அவர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்குவதற்கு மஇகா மகளிர் பிரிவு தயாராக இருப்பதாகவும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எங்களை நாடலாம் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment