ரா.தங்கமணி
ஈப்போ-
புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மேம்பாடு காணப்பட வேண்டுமானால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.
புந்தோங் தொகுதி அதிகமான இந்தியர்களை கொண்ட தொகுதியாக மட்டுமல்லாமல் மலேசியாவிலேயே அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் கருதப்படுகிறது.
இங்கு கடந்த 10 ஆண்டுகளாக மக்களை பிரதிநிதிக்கும் கட்சியினரால் எவ்வித மேம்பாட்டையும் கொண்டு வர முடியவில்லை. மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் இல்லாத இங்குள்ள மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் டத்தோ நரான் சிங் தான் இங்கு வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பதே எங்களின் முடிவு. இங்குள்ள மக்களுக்கு அவர் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார்.
அதன் அடிப்படையில் இத்தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறங்கக்கூடியவர் டத்தோ நரான் சிங். அவர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் பல மேம்பாட்டுத் திட்டங்களை காண முடியும்.
ஆதலால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு மாற்றம் வேண்டும், மேம்பாடு காண வேண்டுமென்றால் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் என நேற்று இங்கு நடைபெற்ற 'பொங்கல் விழா'வில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment