பாலிக் புலாவ்-
கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் மாணவி வசந்தபிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியரின் கணவர் எவ்வாறு தலையிட்டார்? என்று போலீசார் விசாரணை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிபோங் தெபாலில் உள்ள மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயின்ற மாணவி வசந்தபிரியா கைத்தொலைபேசி காணாமல் போனது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் மாணவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார், அந்த ஆசிரியரின் கணவர் இவ்விவகாரத்தில் எவ்வாறு தலையிட்டார் என்ற தகவலையும் பதிவு செய்துள்ளனர் என தென் செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஷாபி அப்துல் சமாட் தெரிவித்தார்.
46 வயதுடைய ஆசிரியையும் 48 வயதுடைய அவரின் கணவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார், இதுவடை 30 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment