புனிதா சுகுமாறன்
ஈப்போ-
அதிகமான இந்தியர்கள் வாழும் புந்தோங் பகுதியே உண்மையான 'லிட்டில் இந்தியா' ஆகும். லிட்டில் இந்தியா கலை, கலாச்சாரத்தை உள்ளடக்கியதாகும். அவ்வகையில் புந்தோங் பகுதி 'லிட்டில் இந்தியா'வாக உருமாற வேண்டும் என புந்தோங் மைபிபிபி மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் கூறினார்.
வெறும் இந்தியர்களின் வர்த்தகங்களை மட்டும் உள்ளடக்கியது லிட்டில் இந்தியா ஆகாது. கலை, கலாச்சாரம் ஆகியவற்றோடு பாரம்பரியத்தை தலைநிமிரச் செய்வதுதான் லிட்டில் இந்தியா ஆகும்.
'புந்தோங் பகுதி' இந்தியர்களின் பல்வேறு வரலாறுகளை கொண்டது ஆகும். இங்குள்ள இந்தியர்கள் கலை, கலாச்சாரத்தை மட்டுமல்லாது ஒரு வர்த்தகத் துறையே உருவாக்கியுள்ளார்கள்.
அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள புந்தோங் பகுதியே உண்மையான 'லிட்டில் இந்தியா' ஆகும். ஜாலான் லஹாட்டில் உள்ளது இந்திய வர்த்தக மையமே தவிர அது லிட்டில் இந்தியா ஆகாது என நேற்று இங்குள்ள புந்தோங் ஐஆர்சி திடலில் பல பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'பொங்கல் விழா'வில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
வரும் பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றால் நிச்சயம் புந்தோங் தொகுதி 'லிட்டில் இந்தியா'வாக உருமாறும் என டத்தோ நரான் சிங் தமதுரையில் கூறினார்.
இந்நிகழ்வில் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், புந்தோங் மைபிபிபி தலைவர் செபஸ்தியன், கேமரன் மலை மைபிபிபி தலைவர் டத்தோ கண்ணா, செபஸ்தியர் கலைக்கூடத்தின் புரவலர் இந்திரசேகரன், அருணகிரிநாதர் மன்றத்தின் தலைவர் மருத்துவர் ஜெயபாலன், மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகர், பேராக் மாநில மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் நோர் ஃபட்சில், பேராக் மாநில மைபிபிபி மகளிர் பிரிவுத் தலைவி திலகம் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment