கோலாலம்பூர்-
தனது காதலியை கொன்று, காரின் முன் இருக்கையில் அவளின் உடலை கிடத்தியவாறு போலீஸ் நிலையம் வந்த ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர், தான் புகார் ஒன்றை கொடுக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கழுத்தில் காயங்களுடன் தனது காதலியின் உடல் காரில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறிய அவரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் அந்த காரை சோதனையிடவுள்ளனர்.
No comments:
Post a Comment